fbpx
Connect with us

Cinemapettai

புதிய ஐபோன் மாடல்கள் இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும் தெரியுமா?

News | செய்திகள்

புதிய ஐபோன் மாடல்கள் இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும் தெரியுமா?

தொழில் நுட்பத்தில் மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்திய சந்தையில் மேற்சொன்ன மாடல்கள் வரும் வெள்ளியன்று மாலை ஆறு மணிமுதல் வரவிருக்கின்றன. வழக்கமாக நள்ளிரவில் தனது மாடல்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் இம்முறை மாலை 6 மணிக்கே வெளியிடவுள்ளது.

இந்திய மதிப்பில் ஐபோன் 8ன் விலை ரூபாய் 64,000, ஐபோன் 8 பிளஸின் விலை ரூபாய் 73,000. ஐபோன் X மாடல் தனது மெமரி அளவை பொறுத்து வெவ்வேறு விலைகளில் விற்கப்பட உள்ளன. 64GB மெமரி கொண்டவை ரூபாய் 89,000க்கும் 256GB மெமரி கொண்டவை ரூபாய் 1,02,000க்கும் விற்கப்படஉள்ளன.

இந்த மாடல்களுக்கான முன்பதிவுகள் கடந்த வெள்ளியன்றே துவங்கிவிட்டன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top