திருட்டு vcd-யை ஒழிக்க சங்க தலைவர் விஷால் போராடிக்கொண்டிருக்கிறார் இதில் இணையதளத்தில் புது படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் அட்மினை பிடிக்க இயக்குனர் சேரன் ஐடியா கொடுத்துள்ளார்.புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் அட்மின்களின் புகைப்படங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா அனைவரின் ரசிகர்களே உலகம் முழுவதும். இவர்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்தால் சாத்தியமே.vishal-vs-tamilrockers_Cinemapettai

அதிகம் படித்தவை:  தமிழ் ராக்கர்ஸ் அதிரடி கோரிக்கை..! இயக்குனர் கதறல்:மலை போல் குவியும் வாழ்த்துகள்!

என்படங்களை தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் போடுவதில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நிறுத்துங்கள் நண்பர்களே. பல தயாரிப்பாளர்களின் குடும்பம் நடுத்தெருவில் மக்கள்வசதிக்கு திரைப்படம் போய்ச்சேரனும். அப்போஇந்த தவறுநடக்காது. அதையே கமல்சாரும் சொல்லிட்டே இருக்கார். எல்லோரும் கூடினால் இந்ததேரை இழுக்கலாம்.

அதிகம் படித்தவை:  விஷால் நடவடிக்கைக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு... சங்க தலைவர் பதவிக்கு ஆப்பு?..

கொஞ்ச நாள் பொறுங்க, கமல் கண்டீப்பா இத தக்க சட்டங்களுடன் நிறைவேற்றுவார் என்று ஒருவர் கமெண்ட் போட அதற்கு சேரன் கூறியிருப்பதாவது, ஹஹா புரியுது புரியுது. எச்சட்டமாயினும் எம்மக்களுக்கு பயனெனில் அம்மன்னனிற்கு சாமரம் வீசலாம் உழைப்போர் முகத்தில் பொங்கிய ஆனந்தம் உன்னாலென.