Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சல்மான் கானுக்குப் புதிய தலைவலி . சர்ச்சையில் `லவ்ராத்ரி’.!

salman-khan

பாலிவுட்டில் மூன்று `கான்’களின் ஆதிக்கம் அதிகம். அதில், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் அதிகம் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதவர்கள். ஆனால், மூன்றாவது கான் ஆன சல்மான் கான் சர்ச்சைகளின் ஊடே வாழ்க்கை நடத்துபவர். அவர் தயாரிப்பில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் படம் `லவ்ராத்ரி’. சல்மான் கான் தயாரிப்பில் ஐந்தாவது படமான இந்த லவ்ராத்ரிதான், அவருக்கு புதிய தலைவலியைக் கொடுத்திருக்கிறது.

பாலிவுட்டில் சயிஃப் அலிகான், அணில் கபூர் இனைந்து நடித்த ‘ரேஸ்’ படத்தின் மூன்றாம் பாகம் ரேஸ் – 3 என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக சல்மான் கான் நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் அணில் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘டிப்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சல்மான் கான் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வரும் 15-ம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில், சல்மான்கான் பிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் லவ்ராத்ரி என்ற படத்தை சல்மான் கான் தயாரித்து வருகிறார். தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஷ் ஷர்மாவை இந்த படம் மூலம் சல்மான் கான் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்துக்களின் முக்கியமான பண்டிகையான நவராத்திரியை அவமதிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்து அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள லவ்ராத்ரி படம் நவராத்திரி கொண்டாடப்படுவதை ஒட்டிய அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்து அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்புடன் இந்து ஹை ஏஜ் என்ற அமைப்பும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சல்மான் கானின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்துக்கு ஒரு படி மேலே போய், சல்மான் கானை பொதுஇடத்தில் வைத்து உதைப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் இந்து ஹை ஏஜ் அமைப்பின் ஆக்ரா வாட்டாரத் தலைவர் கோவிந்த் பர்ஷார்.

துர்கையம்மனின் 9 அவதாரங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்துக்கள் 9 நாட்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும், குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக நவராத்திரி இருக்கிறது. குஜராத்தை மையமாக வைத்த கதை மற்றும் நவராத்திரி பண்டிகையை ஒட்டிய ரிலீஸ் தேதி ஆகியவற்றால் சல்மான் கானின் லவ்ராத்ரி படம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.சல்மான் கானுக்குப் புதிய தலைவலி …. சர்ச்சையில் `லவ்ராத்ரி’

பாலிவுட்டில் மூன்று `கான்’களின் ஆதிக்கம் அதிகம். அதில், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் அதிகம் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதவர்கள். ஆனால், மூன்றாவது கான் ஆன சல்மான் கான் சர்ச்சைகளின் ஊடே வாழ்க்கை நடத்துபவர். அவர் தயாரிப்பில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் படம் `லவ்ராத்ரி’. சல்மான் கான் தயாரிப்பில் ஐந்தாவது படமான இந்த லவ்ராத்ரிதான், அவருக்கு புதிய தலைவலியைக் கொடுத்திருக்கிறது.

பாலிவுட்டில் சயிஃப் அலிகான், அணில் கபூர் இனைந்து நடித்த ‘ரேஸ்’ படத்தின் மூன்றாம் பாகம் ரேஸ் – 3 என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக சல்மான் கான் நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் அணில் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘டிப்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சல்மான் கான் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வரும் 15-ம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில், சல்மான்கான் பிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் லவ்ராத்ரி என்ற படத்தை சல்மான் கான் தயாரித்து வருகிறார். தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஷ் ஷர்மாவை இந்த படம் மூலம் சல்மான் கான் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்துக்களின் முக்கியமான பண்டிகையான நவராத்திரியை அவமதிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்து அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள லவ்ராத்ரி படம் நவராத்திரி கொண்டாடப்படுவதை ஒட்டிய அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்து அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்புடன் இந்து ஹை ஏஜ் என்ற அமைப்பும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சல்மான் கானின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்துக்கு ஒரு படி மேலே போய், சல்மான் கானை பொதுஇடத்தில் வைத்து உதைப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் இந்து ஹை ஏஜ் அமைப்பின் ஆக்ரா வாட்டாரத் தலைவர் கோவிந்த் பர்ஷார்.

துர்கையம்மனின் 9 அவதாரங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்துக்கள் 9 நாட்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும், குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக நவராத்திரி இருக்கிறது. குஜராத்தை மையமாக வைத்த கதை மற்றும் நவராத்திரி பண்டிகையை ஒட்டிய ரிலீஸ் தேதி ஆகியவற்றால் சல்மான் கானின் லவ்ராத்ரி படம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top