ஜி.எஸ்.டி அமல்படுத்த பட்ட பின், சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. திரை அரங்குகளில் டிக்கெட்டின் விலை கணிசமாக உயர்ந்தது. ஏற்கனவே படங்கள் பற்றிய ரெவியூ உடனுக்குடன் வெளி வருவதால் தியேட்டரில் மக்கள் கூட்டம் குறைவது வாடிக்கையான ஒன்று. அது மட்டும் அல்லது இணையத்தில் வேறு படங்கள் உடனுக்குடன் வெளியாகிறது. இதனால் பலத்த நஷ்டம் சினிமா துறைக்கு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர் தியேட்டர் கட்டணங்களை மாற்றியமைக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்தது. தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு சமீபத்தில் மாற்றி  நிர்ணயித்தது.

இந்நிலையில், தியேட்டர் பார்க்கிங் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக நேற்று பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு புதிய  அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  அதர்வாவிற்கு ஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் ஜோடியா?

மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோ பார்க்கிங் கட்டணம் ரூ.20 . இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 அரசு நிர்ணயம் செய்துள்ளது. நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோ பார்க்கிங் கட்டணம் ரூ.15  ;  இரு சக்கர வாகன கட்டணம் ரூ.7 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோ பார்க்கிங் கட்டணம் ரூ.5  இரு சக்கர வாகன கட்டணம் ரூ.3 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து திரையரங்குகளிலும்  சைக்கிளுக்கு இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ஆதரித்து பல சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நன்றியை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  வாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.? அவைகள் என்னென்ன.?

சினிமா பேட்டை காமெண்ட்ஸ்

எனினும் இந்த அரசு ஆணை மால்களில் உள்ள திரை அரங்குகளை செல்லுபடி ஆகாது. உதாரணமாக சத்யம் தியேட்டருக்கு இது பொருந்தும், ஆனால் எஸ்கேப் சினிமாஸுக்கு பொருந்தாது.

 மேலும் சில திரை அரங்க உரிமையாளர்களிடம் கேட்ட பொழுது இந்த அரசு ஆணையில் கட்டணம் ஷோ அடிப்படை வைத்து உறவாக்கப்பட்டதா அல்லது ஒரு மணி நேரத்திற்கான கட்டணமா என்று எங்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை. நாங்கள் மேல் முறையீடு செய்வோம் என்று கூறுகின்றனர்.