Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போகும் ஷிவானியின் ரீல் ஜோடி.. அப்போ பயில்வான் பாலாஜி லீலை முடிஞ்சது!
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் அனு தினமும் புதுப்புது திருப்பங்களை திணித்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர்.
அந்த வகையில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிவானியின் ரீல் ஜோடியான அசீம் பிக் பாஸ்4 வீட்டிற்குள் செல்ல போகிறார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்தத் தகவலை கேட்ட அசீம்- ஷிவானி ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜோடி சீசன் 10’ ஆகிய நிகழ்ச்சிகளெல்லாம் ஷிவானிக்கு ஜோடியாக இருந்தவர்தான் அசீம். மேலும் இவர்களது ஜோடிப்பொருத்தம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சமூக வலைத்தளங்களில் கூட ‘இவர்கள் ரீல் ஜோடியா? ரியல் ஜோடியா?’ என்ற குழப்பம் பல நாட்களாக நிலவி வந்தன.
இவ்வாறிருக்க திடீரென சில ஈகோ பிரச்சினை காரணமாக இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற தொடரில் இருந்து சிவானி திடீரென நீங்கி, வேறு சேனலுக்கு சென்று விட்டார்.
தற்போது அசீமை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புவதன் மூலம் கண்டண்டுங்களைத் தேற்றலாம் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் பிக்பாஸ் குழுவினர்.
எனவே, பிக் பாஸ் வீட்டிற்குள் மக்களுக்குப் பிடித்தமான ரீல் ஜோடி சுற்றித் திரிவதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

shivani-asim
