முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய, மூத்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் ஒன்னறை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பம் என்பது டிடிவி தினகரன் தரப்பினரை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவது தான் எனத் தெரிவித்தார்.

இதற்கு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆட்சியை வழி நடத்த ஒரு குழு அமைத்து தினம் தினம் நடக்க வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என கூறினார்.

இதில் இருந்து தெரியவருவது என்னவென்றால், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.