ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில் வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் இறக்குவது அல்லது பிரபல நடிகையை இறக்குவது போன்ற அதிரடி நடவடிக்கையால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்து வருவதை புரிந்து கொண்ட சேனல் நிர்வாகத்தினர் உடனடியாக நடிகை ஒருவரை உள்ளே அனுப்பியுள்ளனர். அவர் தான் நடிகை சுஜா வருணே.

அதிகம் படித்தவை:  பிக்பாஸில் இருந்து ஐஸ்வர்யாவை துரத்த என்ன ப்ளான் போடுறாங்க பாருங்க வீடியோ உள்ளே.!

சமீபத்தில் வெளியான ‘குற்றம் 23’, ‘கிடாரி’, ‘பென்சில் உள்பட தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணேவின் வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி காப்பாற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.மேலும், இவருக்கு ஒரு வாரத்திற்கு ரூபாய் 3 லட்சம் சம்பளம் பேசப்படிப்பதாக கூறுகிறார்கள். பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், நடிகை சுஜா வருணி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என பலரும் கூறிவருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கும் கோலிவுட் இயக்குநர்கள்... யார் தெரியுமா?

தற்போது வந்த தகவல்படி, பிரபல குத்தாட்ட நடிகை சுஜா வருணி BiggBoss வீட்டிற்குள் சென்றுவிட்டதாக தகவலை நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். அது சற்று முன் வெளியான் ப்ரோமோ வீடியோவால் உறுதிபடுத்தபட்டுள்ளது.