அதிரடியாக துவங்கப்படும் புத்தம்புது 4 சீரியல்கள்.. நீயா நானா என போட்டிபோடும் பிரபல சேனல்கள்!

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருந்து வரும் சேனல்கள், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ்-தமிழ். இந்த சேனல்கள் முன்னிலை வகிக்க முக்கிய காரணம் இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள். அந்த விதமாக ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டு தங்களால் முடிந்தவரை மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு பல நல்ல கதைக்களத்துடன் மக்களை கவர விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பல சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை தன்பால் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறாக மேலும் இந்த முன்னணி சேனல்கள் ஒவ்வொன்றும் நீயா நானா என போட்டி போட்டு இன்னும் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தவும் மக்களை ஈர்க்கவும் பல புதிய சீரியல்களை சுவாரசியமான கதைகள்துடனும் அட்டகாசமான நடிகர் நடிகைகளுடன் உருவாக்கி களம் இறக்கப் போகின்றனர். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு சன் டிவியில் புதிதாக வரப்போகிற சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலை மிகவும் பிரபலமான கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் இயக்கி வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு எதிர் நீச்சல் போட்டு வாழ்கிறார்கள் என்பதை மையக் கருவாகக் கொண்டு அமையப்போகிறது. மேலும் இந்த சீரியலில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை கனிகா மற்றும் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான ஹரிப்பிரியா மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொகுப்பாளினியாக கலக்கி வந்த பிரியதர்ஷினி மற்றும் மதுமிதா போன்றோர் லீட் ரோலில் நடித்து கலக்க போவது போல் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் புதிதாக வெளிவர போகிற சீரியல் ‘வைதேகி காத்திருந்தாள்’. இந்த சீரியலை தற்பொழுது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இயக்குனர் சிவசேகர் இயக்கப்போகிறார். மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் பிரஜன் அவர்களும் கதாநாயகியாக ‘ஆயுத எழுத்து’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை சரண்யாவும் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மூத்த நடிகையான லதாவும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதேபோல் ஜீ தமிழ் சேனலும் இந்த சேனல்களுக்கு போட்டியாக ஒரு புதிய சீரியலை களமிறக்க போகிறார்கள். இதற்கு ‘பேரன்பு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக விஜய் மற்றும் கதாநாயகியாக வைஷ்ணவி போன்றோர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக இந்த போட்டியில் இணையும் மற்றொரு சேனல் கலர்ஸ்-தமிழ். இந்த சேனலும் மற்ற சேனல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக ஒரு புதிய சீரியலை தொடங்க உள்ளனர். அதற்கு ‘வள்ளி திருமணம்’ என பெயர் சூட்டியுள்ளனர். தற்பொழுது இந்த நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ டீசர் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான நடிகர் நடிகைகளை அறிவித்து விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நான்கு புதிய சீரியல்களுக்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ அந்தந்த சேனல்களில் விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.