Tamil Cinema News | சினிமா செய்திகள்
தோனிக்கு , ஷமி சரியான பாடம் கற்றுக்கொடுத்தார்.! ஷமி,ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது தோனி..!
புதுடெல்லி: ஓவர் கான்பிடண்ட் உடம்பிற்கு ஆகாது என புனே வீரர் தோனிக்கு, டெல்லி வீரர் முகமது ஷமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய புனே அணி கடைசி வரை போராடிய போதும், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் புனே வீரர் தோனியை, டெல்லி வீரர் முகமது ஷமி ரன் அவுட்டாக்கியது மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.
https://t.co/d8s0ONfNbb #VIVOIPL via @ipl
— suresh (@suresh9590) May 13, 2017
எப்போதும் ரன்கள் ஓடுவதில் படு வேகமாக செயல்படும் தோனி, நேற்று மிகவும் மந்தமாக ரன் ஓட துவங்கினார். ஷமி கையில் பந்து சிக்கியதை பார்த்த தோனி, பின் சுதாரித்து ஓட, அதற்குள் ஷமி மின்னல் வேக துல்லியமாக ஸ்டெம்ப்பை பதம் பார்த்தார். இதன் மூலம் தோனியின் ஓவர் காண்பிடண்டுக்கு, ஷமி சரியான பாடம் கற்றுக்கொடுத்தார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
