Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெங்கட் பிரபு வெளியிட்ட பில்லா தீம்மில், ‘நெவெர் கிவ் அப்’ – தல அஜித் ட்ரிபியூட் வீடியோ பாடல் !
வெங்கட் பிரபு
கோலிவுட்டில் உள்ள ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவர். தல அஜித்துடன் இவரின் நட்பு பற்றி அனைவரும் அறிந்ததே. தல அஜித்தை வைத்து டார்க் ஜானர் கலந்து “மங்காத்தா” என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர். எந்த பேட்டி என்றால் கண்டிப்பாக இவரிடம் கேட்கப்படும் கேள்வி மங்காத்தா பார்ட் 2 வருமா என்பது தான்.

Venkat Prabhu
அஜித்தின் பிறந்தநாள்
உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள். இது தமிழகம் அறிந்த விஷயமே. இவருடைய நடிப்பு, ஸ்டைல் இதனை தவிர்த்து இவரது உதவும் குணத்திற்கும், தன்னம்பிக்கைக்கும், பேஷன் போன்றவைக்கும் சேர்த்தே தனி ரசிகர்பட்டாளம் பெற்றவர்.
Happy to release #NeverGiveUp https://t.co/9dY1fNHqaT
Music Producer – @ImS_Ashok
Director – @Nishanth4you
Choreographer – @Spring_witu
Associate director – @Swineethsukumar#NeverGiveUp #ThalaBirthdaySpecial— venkat prabhu (@vp_offl) April 30, 2018
இந்நிலையில் இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக புது டீம் உருவாக்கியுள்ள வீடியோ ஒன்றை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வெங்கட்-பிரபு. இன்ஸ்பிரஷனல் வீடியோ போன்ற இதற்கு, தல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
