மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையில் நடக்கும் 51வது லீக் போட்டியில், பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் கப்டில் (36) அதிரடி துவக்கம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல், வழக்கம் போல தனது வேகத்தை காட்டினார். மும்பை அணி பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட இவர், 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி என மொத்தமாக 47 ரன்கள் விளாசி வெளியேறினார்.

அதிகம் படித்தவை:  ஜூலி 2 படம் பிரபல கவர்ச்சி நடிகையின் உண்மைக்கதை தான்.! க்ளு இருக்கு, கண்டுபிடிங்க பாஸ்.!

இதன்பின் பஞ்சாப் அணியின் ரன்வேகத்தை, மார்ஷ் உடன் தன் தோளில் சுமந்தார் சகா. மார்ஷ் (25) ஒருகட்டத்தில் வெளியேற, சகா தனி ஒருவனாக போராடினார். இவருக்கு அக்‌ஷர் படேல், கம்பெனி கொடுக்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. சகா (93), அக்‌ஷர் (19) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில், பும்ரா, கரண் சர்மா, மெக்லீனகன் ஆகியோர் ​ தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. கடின இலக்கை துரத்திய மும்பை அணியின் துவக்க வீரர்களான சிம்மன்ஸ் மற்றும் பி.ஏ. படேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 59 ரன்களில் ஆட்டமிழக்க பி.ஏ. படேல் 23 பந்துகளில் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய ரானா 12 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொல்லார்டு, ஹர்பஜன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு ஆட்டத்தை தொடர்ந்தார்.

அதிகம் படித்தவை:  கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா?

கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்சர் மட்டும் விளாசிய பொல்லார்டு, அடுத்தடுத்த பந்துகளில் ரன்களை குவிக்க தடுமாறினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.