Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடலை குறைத்ததால் இளமையான மீனா.. ஆன்ட்டி ஆன கீர்த்தி சுரேஷ்.. எதுக்கு இதெல்லாம்?
சினிமாவில் நடிகர் நடிகைகள் எப்போதுமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது சாதாரண விஷயம். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமாவிலும் இதுவே அடிப்படை.
சில நடிகர்கள் படத்துக்காக உடலை ஏற்றுவது இறக்குவதும் உண்டு. விக்ரம் பிரபாஸ் போன்றவர்கள் தான் இதற்குச் சான்று. அதேபோல் நடிக்க ஆசைப்பட்டு நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
ஆனால் தொண்ணூறுகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு சற்று குண்டாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

meena
அப்பொழுது கூட அழகாகத்தான் தெரிகிறார். ஆனால் பாலிவுட் பட வாய்ப்பை நம்பி தனது உடல் எடையை மொத்தமாக குறைத்த கீர்த்தி சுரேசை கண்களால் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்வது வருத்தம் அளிக்கிறது.
கீர்த்திசுரேஷ் கொழுக் மொழுக் என்று இருந்த போது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால் தற்போது ஏதோ நோய் தாக்கியது போல உடல் எடையை குறித்து ஆன்ட்டி போல ஆகிவிட்டார். பத்தாக்குறைக்கு அந்த புகைப்படத்தை இணையதளங்களில் வேறு பதிவேற்றம் செய்தார்.

keerthi-suresh
சும்மாவா விடுவார்கள் நமது நெட்டிசன்கள். இஷ்டத்துக்கு மீம்ஸ் போட்டு கீர்த்தி சுரேசை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளனர். மத்தவங்களுக்கு ஒர்க்கவுட் ஆகுது எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது என கீர்த்தி சுரேஷ் கவலையில் உள்ளாராம்.
