Connect with us
Cinemapettai

Cinemapettai

tharsan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சனம் ஷெட்டி பிகினி போட்டா தப்பு.. ஷெரின் போட்டா கரெக்ட்டா? தர்ஷனை சுற்றிவளைக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக டிவி சேனல் முதல் யூடியூப் வரை பரபரப்பாக பேசப்பட்டு வருவது தர்ஷன் மற்றும் சனம் செட்டி ஆகிய இருவரின் காதல் முறிவு தான். அதைப் பற்றி அவர்களே அதிகம் கவலைப்படாத நிலையில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து கவலைப்பட்டு வருகின்றனர்.

தர்ஷன் சனம் ஷெட்டி இருவரின் காதல் முறிவுக்கு அவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பிகினி பேட்டி தான் எனவும், தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனக்கும் தெரியாமல் இந்த வேலையை அவர் செய்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம் என பேட்டி கொடுத்தார்.

அதேபோல் சனம் செட்டி தர்ஷன் மீதான புகார்களை போலீசாரிடம் கொடுத்துள்ளதாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் தொடர்ந்து தர்ஷனை அசிங்கப்படுத்த அனைத்து யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். முக்கியமாக தர்ஷனுக்கு சனம் செட்டி இதுவரை 15 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது தர்ஷனின் புதிய காதலியாக அறியப்பட்டு வருபவர் துள்ளுவதோ இளமை ஷெரின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் தான் வேண்டுமென்றே தர்ஷன், சனம் ஷெட்டியை கலட்டி விட்டு விட்டார் எனவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஷெரினின் பிகினி உடை போட்டோ சம்பவம் இணையதளத்தை வாட்டி எடுத்தது. இதனை கண்ட நெட்டிசன்கள் சனம் ஷெட்டி பிகினி போட்டால் தவறு, ஷெரின் போட்டால் சரியா? என தர்ஷனை வெளுத்து வாங்கி வருகின்றனர். ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த முழிக்கிறார் தர்ஷன்.

அவரின் டிசைன் அப்படி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top