Connect with us
Cinemapettai

Cinemapettai

netrikann-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படம் ஜவ்வு, வில்லனை பார்த்தா பாவமா இருக்கு.. நெற்றிக்கண் படத்தை வெச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இந்த படம் 2011 ஆம் ஆண்டு வெளியான பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நயன்தாரா ஹீரோயின் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் மிகப் பெரிய விலை கொடுத்து நெற்றிக்கண் படத்தை வாங்கியது ஹாட் ஸ்டார் நிறுவனம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரத்தில் எடுக்க வேண்டிய படத்தை இரண்டரை மணி நேரம் எடுத்து ஜவ்வாக இழுத்து வைத்துள்ளனர் என்ற கருத்துக்கள் படம் வெளியான சமயத்தில் இருந்தே பரவலாக சமூக வலைதளங்களில் குவிந்தது.

இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனலில் நெற்றிக்கண் படத்தை முன்னணி நடிகர்களின் படங்களை எப்படி கிழித்து தொங்க விடுவாரோ அதைவிட மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, இரண்டு மணி நேரம் இருக்கும் கொரியன் படமே இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்கள் வந்த நிலையில், ரீமேக் படத்தை இரண்டரை மணி நேரம் ஜவ்வாக இழுத்து வைத்துள்ளனர் என கிண்டலடித்துள்ளார்.

மேலும் இந்த மாதிரி திரில்லர் படங்களில் வில்லனை பார்த்தால் அனைவருக்கும் பயம் வர வேண்டும், ஆனால் இந்த படத்தில் வில்லனாக வரும் அஜ்மலை பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் சுமாரான படத்தையே ரொம்ப சுமாராக எடுத்து வைத்துள்ளனர் என படத்திற்கு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நயன்தாரா ரசிகர்கள் வழக்கம் போல் ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றி வருகின்றனர்.

netrikann-review-from-blue-sattai-maran

netrikann-review-from-blue-sattai-maran

Continue Reading
To Top