Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-ott-bigg-boss

Videos | வீடியோக்கள்

இந்தக் குரலைக் கேட்டாலே கொலை வெறி ஆகுது பிக்பாஸ்.. தயவுசெய்து இவங்கள மட்டும் மாத்திடுங்க!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி ஆக பார்க்கப்பட்ட ஜூலி, பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது பெயர் டேமேஜ் ஆனது. இதையடுத்து ஜூலி மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் கலந்து கொள்ளப் போவதாக அவரே நடித்திருக்கும் புரோமோவில் ஓவர் டயலாக் பேசி நெட்டிசன்களால் கிழித்து தொங்க விடப்பட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக ப்ரோமோவில் மத்தவங்களுக்கு குறும்படம் போடப் போகிறேன் என்பது போன்ற வீர வசனங்களை பேசி இருக்கிறார். இதைக்கேட்ட நெட்டிசன்கள், ‘மத்தவங்களுக்கு குறும்படம் போடுவீங்க. ஆனா அதுலயும் நீதானம்மா இருப்ப’.

‘நிகழ்ச்சிக்கு வந்த பிறகு இரண்டு வாரத்துல அம்மா என்ன வெளிய விடுங்கம்மா, ஐயோ அம்மா என்ன காப்பாத்துங்க என்று கதற போகிறாய், எனவும் ஒரு சிலர் ஜூலியை சரமாரியாக பங்கம் செய்கின்றனர்.

‘வந்து மறுபடியும் செருப்படி வாங்கிகாம இருந்தா சரிதான்’ என்றும் ‘உன்னுடைய குரலைக் கேட்டாலே காண்டு ஆகுது’ என்றும் ஜூலி வெளியிட்ட பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோவை பார்த்த பின்பு ரசிகர்கள் ஜூலியை சோசியல் மீடியாவில் தாறுமாறாகக் கிண்டல் அடிக்கின்றனர்.

இருப்பினும் ஜூலி பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் நடந்து கொண்டது போல் பிக் பாஸ் அல்டிமேடிலும் பொய் பித்தலாட்டம் செய்வாரா அல்லது அதையெல்லாம் மாற்றிக்கொண்டு புது ஜூலியாக ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜூலி பில்டப் விடும் வீடியோ இதோ!

Continue Reading
To Top