புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வாழு வாழ விடு, இத நீங்க சொல்லலாமா விக்னேஷ் சிவன்.. வந்த பாதையை மறந்துடாதீங்க பாஸ்!

Nayanthara: வாழு வாழ விடு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று தனுஷுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். உண்மையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய இந்த வார்த்தையை தான் இவர்கள் இருவரும் அவருக்கு சுட்டி காட்டுகிறார்கள்.

தனுஷ் பேசிய வீடியோவோடு வாழு வாழ விடு என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த பதிவை நீக்கி விட்டார். நயன்தாரா மற்றும் சேர்ந்து நடித்தவர்கள், அதற்கு அடுத்து மனக்கசப்பு இது போன்ற அறிக்கைகள் வெளிவருகிறது.

ஆனால் விக்னேஷ் சிவனை பொருத்தவரைக்கும் அவர் தனுஷை பார்த்து வாழவிடு என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். இதை பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

வந்த பாதையை மறந்துடாதீங்க பாஸ்!

பிரச்சனை தங்களுக்குள் இருக்கும் வரை தான் தாங்களே ஒரு கருத்தை எடுத்துக் கொள்ள முடியும். பிரச்சனை பொது வெளியில் வரும்போது பலரது கருத்துக்களையும் கேட்டு தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கருத்து தான் விக்னேஷ் சிவன் தனுஷை பார்த்து என்னை வாழ விடு என்று சொல்லலாமா என்பது.

2012 ஆம் ஆண்டு போடா போடி படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தின் கதையை படமாக எடுக்க எவ்வளவு சிரமப்பட்டார் விக்னேஷ் சிவன் என்பதை அவரே பல பேட்டிகளில் சொல்லிவிட்டார். வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்ததோடு விக்னேஷ் சிவனுக்காக அந்த கதையையும் தயாரிக்க முன் வந்தார் தனுஷ்.

தனுசுடன் இருக்கும் நட்பினால் தான் நயன்தாரா விக்னேஷ் சிவனின் கதையை கேட்பதற்கே ஒத்துக்கொண்டிருப்பார். சிம்பு படத்தை இயக்கிய அதுவும் தோல்வி படமான இயக்குனர் ஒருவரை கதை சொல்ல வீட்டிற்கு வாருங்கள் என நயன்தாரா சொல்வதற்கு வாய்ப்பு இல்லை.

அதன் பின்னர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராதிகா என பெரிய பெரிய நட்சத்திரங்கள் உள்ளே வந்ததும் தனுஷ் என்ற பெயருக்கு பின்னால்தான். நானும் ரவுடிதான் படம் விக்னேஷ் சிவனுக்கு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட். இப்போதைக்கு போடா போடி படத்தை இயக்கிய இயக்குனர் என்று விக்னேஷ் சிவனை யாருமே சொல்வது கிடையாது.

அவருடைய அடையாளம் நானும் ரவுடிதான். அதன் பின்னர் அவராலேயே இதே மாதிரியான ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு கருத்தை தனுஷ் மீது வைத்திருக்கக் கூடாது என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது விமர்சனமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News