விஜய்யைப் பார்த்து காப்பியடித்த ரஜினி.. வாண்டடாக கண்டன்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

Rajinikanth – Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர். ஆரம்ப காலங்களில் இவர் போட்ட கடின உழைப்பிற்கு பலனாக இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இளம் ஹீரோக்களுக்கு இணையாக காமெடி, டான்ஸ், மாஸ் என இத்தனை வயதிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை ஹீரோக்களுக்கும் ஒரு நாள் ரஜினிகாந்த் போல் வந்து விட வேண்டும் என்பது கனவாகவும், ஆசையாகவும் தான் இருக்கும். அவரைப் பார்த்து சினிமாவிற்கு நுழைந்தவர்களும் பல பேர் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இது போன்ற ஹீரோக்களை ரஜினி வாழ்த்து சொல்லி, பாராட்ட வேண்டுமே தவிர அவர்களிடம் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Also Read:சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்

கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஆரம்பித்து விட்டது. சமீப காலமாக அந்தந்த ஹீரோக்களை பிடித்த ரசிகர்கள் மற்றும் சினிமாவில் லாபம் பார்க்கும் பிரபலங்கள் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சையை கொழுந்து விட்டு எரிய விட்டு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொண்டு அனுபவம் உள்ள ரஜினி கண்டுகொள்ளாமல் இருப்பது தான் சரியானதாக இருக்கும்.

எப்போதுமே தன்னுடைய படங்களின் வெற்றி விழாவில் ரஜினி கொஞ்சம் உற்சாகமாக பேசுவது உண்டு. இசை வெளியீட்டு விழாக்களில் படத்தைப் பற்றியும், தன்னுடைய ரசிகர்களை பற்றியும் மட்டுமே பேசும் பழக்கம் கொண்ட ரஜினி, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசியது மிகப் பெரிய பேசு பொருளாக மாறிவிட்டது.

Also Read:வாய மூடிக்கிட்டு இருக்கணும், ஹூகும்!. நெல்சனுக்கு டைகர் முத்துவேல் பாண்டியன் போட்ட ஆர்டர்

தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் அரசியல் என்பது தளபதி விஜய் ஆரம்பித்து வைத்த ஒன்று. அப்படி இருக்கும்பொழுது ரஜினி தன்னுடைய ஆடியோ வெளியீட்டு விழாவின் போது இதுபோன்று சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கிறேன் என பேசியது, ரஜினி நடிகர் விஜய்யை காப்பி அடித்து செய்தது போல் இருக்கிறது. அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் தன்னைத்தானே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். இது அவருக்க அவசியமில்லாத ஒன்று. இதுபோன்ற சர்ச்சைகளை அவர் கடந்து செல்வது தான் அவரின் அனுபவத்திற்கு அழகு. அதை விட்டுவிட்டு விஜய் என்ன செய்கிறாரோ அதை அப்படியே காப்பி அடித்து ரஜினி செய்திருக்கிறார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து பேசி வருகிறார்கள்.

Also Read:இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

Next Story

- Advertisement -