புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நேத்து துர்கா, இன்னைக்கு கங்கா.. நல்லா பண்றீங்கம்மா மார்க்கெட்டிங்!

Nayanthara: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று சொல்லுவாங்க. ஆனா மார்க்கெட்டிங் வந்துட்டா வெள்ளைக்காரன் என்று தான் இனிமே சொல்ல வேண்டும் போல. நேற்று நடந்த நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து எல்லோருக்கும் தெரியும்.

காலையில் சமூக வலைத்தளத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து தனுஷ் கரெக்டா, நயன்தாரா கரெக்ட்டா என பஞ்சாயத்து தொடங்கியது. தன்னுடைய பங்குக்கு சும்மா இருக்க கூடாது என ஓடிடி தளங்கள் சிறப்பாக தங்களுடைய மார்க்கெட்டிங்கை தொடங்கியதை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை.

நல்லா பண்றீங்கம்மா மார்க்கெட்டிங்!

எந்த தளத்தில் எல்லாம் சந்திரமுகி மற்றும் நானும் ரௌடி தான் படம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இன்று காலை கரெக்டாக நோட்டிபிகேஷன் கொடுத்தார்கள். அதுவும் ஒரு சேனல் துர்கா சந்திரமுகியாக மாறிய தருணம் என்றெல்லாம் நோட்டிபிகேஷன் கொடுத்தது.

இது ஒரு பக்கம் இருக்க கரெக்டா மணி 10 ஆனதும் ஜோதிகா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். உங்களுக்கு ஏன் சூர்யா படத்தின் மீது இவ்வளவு வன்மம், படம் நல்லா தானே இருக்கு, இரட்டை அர்த்த வசனங்கள் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருக்கும் படங்களை எல்லாம் இப்படி விமர்சிப்பீர்களா என தொடர்ந்து கேள்வி கனைகளை தொடுத்தார்.

பாசிடிவ் இருந்தா சொல்ல மாட்டோமா என ஒரு பக்கம் இணையவாசிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷ் நயன்தாரா பஞ்சாயத்தில் கங்குவா படத்தை மறந்துவிடப் போகிறார்கள் என ஜோதிகா பப்ளிசிட்டி தேடி கொள்கிறார் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதே மாதிரி என்னை பற்றி டாக்குமென்டரி படம் வருகிறது என நயன்தாரா சொல்லியும் பெரிதாக வரவேற்பு இல்லாததால் தனுஷை உள்ளே இழுத்து போட்டு விட்டதாக வலைப்பேச்சு சேனல் பிஸ்மி சொல்லி இருக்கிறார். ஆக மொத்தத்தில் நேற்று துர்கா, இன்று கங்கா என்றாகிவிட்டது.

- Advertisement -

Trending News