வன்மம் , ஆதிக்கம் பத்தி நீங்க பேசலாமா மணி, CWC-ல இவ்ளோ நாள் செஞ்சதெல்லாம் மறந்து போச்சா?. இதுக்கு பேர்தான் கர்மா

VJ Manimeghalai: பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மணிமேகலைக்கு சமூக ஆதரவு தான் இருந்து வந்தது. பிரச்சனை பெரிதாகும் நேரத்தில் மணிமேகலை மீது இருக்கும் சில தவறுகளும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

மணிமேகலையை பொறுத்த வரைக்கும் அவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர். அவருடைய திருமணத்திற்கு பிறகு சேனலில் இருந்து பிரேக் எடுத்த மணிமேகலைக்கு விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை கொடுத்தது.

கிடைத்த வாய்ப்பை உடும்பு பிடி போல் பிடித்துக் கொண்டார் மணிமேகலை. தொடர்ந்து விஜய் டிவியில் எந்த பக்கம் பார்த்தாலும் மணிமேகலையின் முகம் தான் தெரிந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு மணிமேகலைக்கு கிடைத்தது.

இதுக்கு பேர்தான் கர்மா

புகழ், சிவாங்கி, பாலா போன்றவர்களை தாண்டி தன்னுடைய முகம் தெரிவதற்காக மணிமேகலை பல குட்டிக்கரணம் போட்டார். எல்லா இடத்திலும் தன்னுடைய முகம் தெரியும் அளவுக்கு அவர் பார்த்துக் கொண்டது சில நேரங்களில் நமக்கே எரிச்சலாக தான் இருந்தது.

என்னதான் கோமாளியாக கலக்கினாலும் தன்னை ஒரு தொகுப்பாளனியாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மணிமேகலைக்கு இருந்து வந்தது. கோமாளியாக இருந்தபோதே ஆங்கர் ஆக இருந்த ரக்சன், நிஷாவை பல நேரங்களில் மணிமேகலை கிண்டல் அடித்திருக்கிறார்.

இவங்களுக்கு ஆங்கரிங் பண்ண தெரியவில்லை, நான் அந்த இடத்திற்கு வருகிறேன் என காமெடியாக சொல்வது போல் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். மேலும் பிரேக் விடும் நேரங்களில், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களை அழைக்கும் நேரங்களில் ரக்சன் மற்றும் நிஷாவை விட்டு விட்டு இவர் அந்த இடத்திற்கு வந்து தொகுப்பாளர் வேலை பார்த்திருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் சிவாங்கி போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக நீங்கினார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சிக்குள் அவர் தொகுப்பாளராக தான் வந்தார்.

சிவாங்கிக்கு நாம் கோமாளி ஆகிவிடக் கூடாது என்ற ஈகோவினால் தான் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என அப்போது பேசப்பட்டது. சேனல் தரப்பிலிருந்து பேசி அவரை தொகுப்பாளினியாக உள்ளே கொண்டு வந்தார்கள்.

நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி வரும். நிஷா ஆங்கரிங் பண்ணும் போது மணிமேகலை எப்படி எல்லாம் கலாய்பார் என்பது நமக்கு நினைவு இருக்கும்.

அதே விஷயத்தை பிரியங்கா இவருக்கு பண்ணும் போது இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிஷாவை நீங்கள் கலாய்த்த கர்மா தான் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று இணையவாசிகள் பலரும் தற்போது தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

பிரளயத்தை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை

- Advertisement -spot_img

Trending News