செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இதுக்கு அப்றம் என்ன பிரைவசி, அட்மினை மாத்துங்க ரஹ்மான்.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்தியை வெளியிட்டதில் இருந்து, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சென்னையில் இந்து குடும்பத்தில் பிறந்த ஏ.எஸ். திலீப் குமார் தனது சகோதரி உடல்நிலை சரியில்லாமல் போனபோது பள்ளி வாசல் மூலமாக அவர் குணமானார் என்கிற நம்பிக்கையுடன் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் (ஏஆர் ரஹ்மான்) என மாற்றிக் கொண்டார்.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறிய இவர், தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் தனது இசையால் பல படங்களை வெற்றியடைய செய்தார். 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வென்றார். இதுவரை 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.

இதுக்கு அப்றம் என்ன பிரைவசி

1996-ல் சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்தார். 29 வருடங்கள் இவர்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை முதலில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் போட்டு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதில், தங்களது பிரைவஸியை ரசிகர்கள் மதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் #arrsairaabreakup எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்தினார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது, “முதலில் அட்மினை மாற்றுங்கள்” என்று கூற ஆரம்பித்துவிட்டனர். பிரைவசி வேண்டும் என்று நினைப்பவர், இப்படி தான் ஹாஷ்டாக் போட்டு ட்ரெண்ட் செய்வாரா என்று தாளிக்கிறார்கள். இந்த நிலையில், இன்னும் ஹாஷ்டாக் ரிமூவ் செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், தற்போது, குடும்பத்தினரும், நண்பர்களும், இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இது ரஹ்மானுக்கே தெரியாது.. என்று ஆளுக்கு ஒரு செய்தியை தற்போது பரப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News