தனது நண்பருக்கு கன்னத்தில் முத்தமிட்டபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அமலா பால் கணவர் விஜய்யை பிரிந்த பிறகு மாடர்னாக உடை அணிந்து வருகிறார். குட்டி குட்டியான உடையில் அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளானார்.

தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார்.

அமலா தனது நெருங்கிய நண்பரான அஜீத் நாயர் என்பவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

திருமண மாப்பிள்ளையை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் அமலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அமலா தனது நெருங்கிய நண்பரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து அவரை கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

விவாகரத்திற்கு பிறகு ரொம்பவே ஃப்ரீ, ஜாலியா இரும்மா. நல்லா வருவம்மா நீ. விஜய்க்காக சந்தோஷப்படுகிறோம், அவருக்கு அமலா தேவையில்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். சிலர் சொல்ல முடியாத அளவுக்கு அமலாவை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.