தியேட்டரில் கதறவிட்டாங்க, ஓடிடியில் இருக்குற மானத்தையும் வாங்கிட்டாங்க.. இந்தியன் தாத்தாவை கதறவிடும் இணையவாசிகள்!

Indian 2: ‘ தாத்தா வராரு, கதர விட போறாரு’ என்று எந்த நேரத்தில் அனிருத் பாட்டு போட்டாரோ தெரியவில்லை இந்தியன் 2 என்றாலே கதறல் சத்தம் தான் கேட்கிறது. தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்களை இந்தியன் தாத்தா கதறவிட்டார்.

ரசிகர்களை நம்பி OTT பக்கம் வந்த இந்தியன் தாத்தாவை இணையவாசிகள் கதற விட்டு கொண்டிருக்கிறார்கள். நேற்று netflix தளத்தில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் பக்கம் போனாலே அந்த படத்தின் காட்சிகளை கிளிப்பிங் ஆக போட்டு வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.

இந்தியன் தாத்தாவை கதறவிடும் இணையவாசிகள்!

படத்தின் காட்சிகள், சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு, வசனங்கள் என அத்தனையுமே ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டது. இதை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் இணையவாசிகளுக்கு வேறொரு மேட்டர் கையில் சிக்கி இருக்கிறது.

இந்தியன் தாத்தா என்றாலே வர்மக்கலை தான் நமக்கு ஞாபகம் வரும். இந்தியன் 2 படத்தில் வர்மக்கலையை ஏடாகூடமாக பில்டப் கொடுத்து மொத்தமாக டேமேஜ் செய்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இணையவாசிகள் கண்டுபிடித்து கலாய்க்கும் ஐந்து வர்ம கலைகளை பற்றி பார்க்கலாம்.

பாலின மாற்றம்: வர்மக்கலை என்றால் விரல்களை வைத்து நரம்புகளை கட்டுப்படுத்துவது தான். ஆனால் இந்தியன் தாத்தா தன்னுடைய வர்மக்கலையை வைத்து பாலினத்தையே மாற்றிவிட்டார். விரல்களை வைத்து வில்லனின் கழுத்தை குறிவைத்து தாத்தா குட்டி ஏதும் வில்லன் கண்களில் மை, உதட்டில் லிப்ஸ்டிக் என போட்டுக்கொண்டு அப்படியே பெண் போல் நளினம் காட்டுவார். அது மட்டுமில்லாமல் இந்த வர்மக்கலை அகத்திய முனிவரால் கண்டுபிடிக்கப்பட்டது என இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

நீண்ட நேர தூக்கம்: காரில் உட்கார்ந்திருக்கும் நெடுமுடி வேணு கழுத்தில் தாத்தா குறி பார்த்து தாக்கியதும் அவரின் நாக்கு வெளியில் தள்ளிவிடும். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, இந்த வர்மக்கலையால் பாதிக்கப்பட்டவர்கள் 48 மணி நேரத்துக்கு தூங்குவார்கள் என்று சொல்வது தான் கிண்டலுக்கு ஆளானதுக்கு காரணம்.

பாட்டு பாடுவது: டெல்லி கணேஷை தாத்தா வர்மக்கலையால் தாக்கியது அவர் வாயை திறந்து கந்த சஷ்டி கவசம் பாடுவார். இப்படி ஒரு வர்மக்கலையை யாருமே கேள்வி பட்டு கூட இருக்க மாட்டார்கள்.

அஸ்வபிந்து: அஸ்வபிந்து என்ற பெயரை கேட்டதும் கொஞ்சம் கெத்தாக தான் இருக்கிறது. ஆனால் இந்தியன் தாத்தா வில்லனின் தோள்பட்டையில் குத்தியதும் உடனே வில்லன் குதிரை போல் ஓட ஆரம்பித்து விடுவது தான் பார்ப்பதற்கே கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது.

ஒட்டு வர்மம்: இந்தியன் தாத்தா தன்னுடைய வர்மக்கலை திறமையால் வில்லனை தாக்கியதும் வில்லனுக்கு வாயிலிருந்து நீராக கொட்டும். இந்த வர்மக்கலையால் பாதிக்கப்பட்டவர்கள் உடம்பிலிருந்து மொத்தமாக தண்ணீர் வெளியேறி மரணித்து விடுவார்களாம்.

Next Story

- Advertisement -