Connect with us

Cinemapettai

பாவ கதைகள்: வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு விமர்சனம்.. இது அரண்மனை 2 கதையாச்சே!

paava-kadhaigal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாவ கதைகள்: வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு விமர்சனம்.. இது அரண்மனை 2 கதையாச்சே!

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் நால்வர் படைப்பில் வித்தியாசமான கதைகளில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வெப்சீரிஸ் தான் பாவக் கதைகள். நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.

விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகிய நான்கு இயக்குனர்களும் இணைந்து இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளனர். இதில் வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு என்ற கதையின் விமர்சனத்தை பார்ப்போம்.

ஜாதி வெறியில் ஊறிப்போன ஒருவரின் மகள் காதல் திருமணம் செய்தால், ஜாதியை காப்பாற்ற கொலை செய்யக்கூட என்பதை காட்சிக்கு காட்சி கௌரவ வெறியை காட்டி சிலிர்க்க வைத்துள்ளார் வெற்றிமாறன்.

ஜாதி வெறி நபராக நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். நடிப்பைப் பற்றி இவருக்கு சொல்லியா தரவேண்டும். பிரகாஷ்ராஜின் மகளாக நடிக்கும் சாய்பல்லவி கீழ்ஜாதி பையன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் நகரத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவி கர்ப்பமாக இருப்பது தெரிந்து அவரை பார்ப்பதற்காக நகரத்திற்கு வருகிறார் பிரகாஷ்ராஜ். பேரக் குழந்தையை பார்க்க போற சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதாக பார்க்கும் பலரிடமும் பொய் வேஷம் போட்டு வருகிறார்.

ஆனால் உள்ளுக்குள் பிரகாஷ்ராஜுக்கு வேறு ஜாதி பையனுடைய குழந்தை தனக்கு வாரிசாக வரக்கூடாது என பிரசவ வலியால் துடிக்கும் சாய் பல்லவி எப்படி பழி தீர்த்துக் கொள்கிறார் என்பதைப் போல வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

மேலும் மதுரை அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கியதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். ஆவணப் படுகொலைகளை தோலுரிக்கும் விதமாக உருவாகியுள்ள வெற்றிமாறனின் ஓர் இரவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

oru-iravu-vetrimaaran

oru-iravu-vetrimaaran

ஆனால் அரண்மனை 2 படத்தின் கதையும் இது போன்று தான். ஜாதி வெறியில் இருக்கும் ராதாரவி தன்னுடைய மகளான ஹன்சிகா கீழ்ஜாதி பையனை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக இருக்கும் போது ஊருக்கு அழைத்து அவர்களை கொன்றுவிடுவார். ஒரே கதையில் வந்திருந்தாலும் காட்சிகள் வெவ்வேறாக அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றம் இல்லை என்றே சொல்லலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top