இந்தியாவில் OTT தளங்களின் பயன்பாடுகள் அதிகமானதை தொடர்ந்து வெப்சீரிஸ் பார்க்கும் பழக்கம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரசிகர்கள் OTT தளங்கள் பக்கம் படையெடுக்கத் தொடங்கினர். அதன் மூலம் வெப்சீரிஸ் பார்க்க பழகி விட்டனர்.
திரைப்படங்களை விட வெப்சீரிஸ் பரபரப்பாக இருப்பதால் சமீபகாலமாக திரைப்படங்களை விட ரசிகர்கள் அளவுக்கதிகமாக வெப்சீரிசை ரசித்து வருவது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் பிரபலமான OTT தளமாக வளர்ந்துவரும் நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் பாவக் கதைகள் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வந்தது.

அஞ்சலி, சிம்ரன், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் பாவக் கதைகள் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.
மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் ரத்தக்களறியாகவும் உருவாகியிருக்கும் பாவக் கதைகள் ட்ரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.