நாலா பக்கமும் மக்கள் பணத்தை சுரண்ட நினைக்கும் கார்ப்பரேட்.. ஆஃபர் கொடுத்து ஆப்பு வச்ச நெட்ப்ளிக்ஸ்

OTT Netflix: தற்போது தியேட்டர்களில் படத்தை போயி பார்ப்பதை விட வீட்டில் இருந்தபடியே ஓடிடி மூலம் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். முக்கியமாக இந்த ஒரு விஷயம் கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகமாகி விட்டது. கொரோனா காலத்தில் எந்த ஒரு வசதியும் இல்லாத போது வீட்டில் இருந்தபடியே நேரத்தை பொழுது பொழுது போக்குவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது கார்ப்பரேட் நிறுவனம்.

அந்த சமயங்களில் ஓடிடி தளங்கள் மக்களிடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்தது. அதில் ஹாட்ஸ்டார், அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை மக்கள் அதிகமாக பார்த்து வந்தார்கள். அந்த வகையில் அதிக பிரபலமான நெட்ப்ளிக்ஸ் பல ஆஃபர்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி விட்டார்கள்.

இதனால் பல குடும்பங்களில் புதுப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் அனைத்தையும் வீட்டில் இருந்து படியே பார்த்து வந்தார்கள். இவர்களுடைய சப்ஸ்கிரிப்ஷன் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அதனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தற்போது நெட்பிளிக்ஸ் அதிக கட்டணத்தை வசூலிக்க போகிறது.

Also read: OTT-யால் வந்த சாபக்கேடு.. மக்களால் பாராட்டப்படாத விட்னஸ் ஒரு தரமான விமர்சனம்

அதாவது கொடுக்கிற மாதிரி கொடுத்து பின்னாடியே ஆப்பு வைப்பாங்க என்று சொல்வார்கள். அது போல பல ஆஃபர்களை கொடுத்து அடிட் ஆக்கிவிட்டு இப்பொழுது மாத கட்டணமாக 1500 ரூபாய் என்று உயர்த்த இருக்கிறார்கள். அதாவது இதுவரை 500 முதல் 600 வரை மாச கட்டணம் என்று வசூலித்து வந்த netflix நிறுவனம் தற்போது வருகிற டிசம்பர் மாதம் முதல் 1500 ரூபாயாக உயர்த்தப் போகிறது.

இப்படி நாலா பக்கமும் மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுரண்டலாம் என்று ரூம் போட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் யோசித்து இருப்பார்கள் போல. அதன்படியே பாயிண்ட் பாயிண்ட் ஆக மக்கள் பணத்தை சுரண்டி வருகிறார்கள். அவர்கள் கோடியில் புரள வேண்டும் என்பதற்காக நடுத்தர மக்களை அட்டைப்பூச்சி மாதிரி உறிஞ்சுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

இதற்கிடையில் நடுத்தர மக்கள் தியேட்டர் போனா ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 1500 ரூபாய்க்கு மேல ஆகுது என்று யோசித்து தான் மாதம் ஒருமுறை ஓடிடி நிறுவனத்தை சப்ஸ்கிரைப் பண்ணி இருந்தார்கள். ஆனால் இதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக கார்ப்பரேட் நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது.

netflix
netflix

Also read: OTT ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரு வழியா தளபதி 68ல் இணைந்த அஜ்மல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்