fbpx
Connect with us

Cinemapettai

மூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..

ajithkumar-59

News | செய்திகள்

மூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..

நீதிமன்ற வசனத்தில் கலக்கப் போகும் அஜீத். மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’. முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அறிவிப்புகள்.

Nerkonda paarvai : அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வரும் மே 1ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் பணக்கார வர்க்கத்தினரால் பாதிக்கப்பட்ட 3 இளம்பெண்களை காப்பாற்றி தண்டனை வாங்கி கொடுப்பது தான் கதை. இதற்காக வழக்கறிஞராக பல வசனங்களில் வாதாடியுள்ளார் அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித்.

பொதுவாக அஜித் வசனங்கள் பேசுவதில் கொஞ்சம் மெதுவாகத்தான் பேசுவார் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போது நடித்துவரும் பிங்க் ரீமேக்கில்(‘நேர்கொண்ட பார்வை’ – ‘Nerkonda paarvai’ ) மிகப்பெரிய ஒரு வசனத்தை மனதில் நிறுத்திக்கொண்டு பேசி அசத்தினாராம்.

இது மட்டுமல்லாமல் இந்த வசனங்கள் அனைத்தும் வேற லெவல் ஸ்டைலில் இருக்கும் என்று கூறுகின்றனர். அதற்கும் மேலாக நான்கு நாட்களுக்கு முன்னதாகவே முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். இது அஜித்தின் நடிப்பில் வேகத்தை அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதில் அஜித் மற்றும் வித்யா பாலன் தொடர்பான காட்சிகள் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top