fbpx
Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் பற்றி ட்வீட் செய்த தளபதி 63 தயாரிப்பாளர்.!

ajith-vijay

News | செய்திகள்

நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் பற்றி ட்வீட் செய்த தளபதி 63 தயாரிப்பாளர்.!

தல அஜித் விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேற்று நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலரை நேற்று  மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்தார்கள் ரிலீஸ் செய்த சில நிமிடங்களிலேயே யூட்யூபில் டிரெண்டிங்கில் வந்தது மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியது, இந்த டிரைலரைப் பார்த்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி நேர்கொண்ட பார்வை டிரைலர் குறித்து h வினோத் மற்றும் படக்குழு அனைவரையும் பாராட்டியுள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இப்படி தளபதி 63 update எதையும் வெளியிடாமல் சுத்த விடுகிறீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top