Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை – அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா இதோ வந்துவிட்டது மாஸ் அப்டேட்.!

ajith nerkonda paarvai

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை – அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா இதோ வந்துவிட்டது மாஸ் அப்டேட்.!

தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார், மேலும் ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், மேலும் படத்தில் ஷரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம்,ஆண்ட்ரியா, பிரகாஷ்ராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடுவதற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது, நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன, மேலும் விரைவில் டப்பிங் பணிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.

வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top