fbpx
Connect with us

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

nerkonda-paarvai-release-date

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தினைப் பற்றிய செய்திகள் தான் அஜித் ரசிகர்கள் இன்டர்நெட்டில் அதிக அளவில் தேடி வருகின்றனர். தற்பொழுது நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்த செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரீமேக் படமாக இருந்தாலும் சமூகத்திற்கு தேவையான படம் என்பதால் நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதற்கு வினோத் சரியான இயக்குனராக இருப்பார்கள் என தேர்வு செய்து படத்தின் டிரைலரும் வெளியிட்டு பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தில் அஜித்க்கு மற்றும் மேலும் ஒரு பப் பாடல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை குறைந்த பாடல்கள் மட்டுமே உள்ளன.

இப்பொழுது நேர்கொண்ட பார்வை படத்தினை ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வெளியிட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்பொழுதே பேனர் டிசைன்,  போஸ்டர், ரிலீஸ் தேதி என அனைத்தையும் வெளியிட்டு பகிர தொடங்கி விட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top