நேர்கொண்ட பார்வை.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: நேர்கொண்ட பார்வை படம் அஜித் ரசிகர்களுக்கு அன்லிமிடெட் மீல்ஸ் போல் அருமையாக இருக்கும் என்கிறார்கள். அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்பதை பிங்க் இந்திய படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் ஏமாந்து போவீர்கள். காரணம் இந்தியில் உள்ள கதையை அப்படியே இப்போது எடுத்து இருந்தாலும் அதில் காட்சிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அவை என்னென்ன என்பதை இப்போது பார்த்துவிடுவோம். அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற படம் தான் பிங்க். இதைத்தான் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் போணி கபூர் தயாரித்துள்ளார். தீரன் அதிகாரம் படத்தை இயக்கி வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தை எப்படியும் நாளையே பார்த்துவிட வேண்டும் என்றும் ஆசையில் உள்ள தல ரசிகர்களுக்கு சில தகவல்கள் சொல்லிவிடுவோம்.

நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ செய்தியாளர்களுக்காக சிங்கப்பூரில் நேற்று நடந்தது. அப்போது படத்தில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என இயக்குனர் வினோத் விளக்கம் அளித்தார்.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறப்பதை மட்டும் தான் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழில் வித்யா பாலன் அஜித்துடன் சேர்ந்து டூயட் பாடுகிறார். வித்யா பாலனும் இறந்து போவது போன்று காட்டினாலும் காரணம் வேறாக உள்ளது. அஜித், வித்யா பாலன் இடையேயான கெமிஸ்ட்ரி அருமையாம்.

இந்தியில் அமிதாப் பச்சன் யாருடனும் சண்டை போடவில்லை. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரே சமயத்தில் 30 40 பேரை அடித்த நொறுக்கி மாஸ் காட்டும் சண்டை காட்சி உள்ளதாம்.

வசன உச்சரிப்பு, நடிப்பு, நீதிமன்ற வாத காட்சிகள் நிச்சயம் அஜித் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்குமாம். யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் பெரிய பலம். நேர்கொண்ட பார்வை அஜித்துக்கு சிறந்த படம் என்கிறார்கள். அவரது ரசிகர்களுக்கும் தான்.

Leave a Comment