நேர்கொண்ட பார்வை படம் குறித்து சினிமா பிரபலம் வெளியிட்ட சூப்பர் தகவல்

இந்தி படமான பிங்க் படத்தை விட, அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் மிக சிறப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக எந்த சினிமா வெளியாகும் முன்பும் அந்த படத்தின் பிரிமியர் ஷோக்கள் திரையுல விநியோகிஸ்தர்கள் மற்றும் திரை உலகினருக்கு போட்டு காட்டப்படும். அப்படித்தான் அண்மையில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை போட்டுக்காட்டியுள்ளார்கள்.

இந்த படத்தை பார்த்த பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர், அமிதாப் நடித்த பிங்க் படத்தை விட அதன் தமிழ் ரீமேக்கான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

தல அஜித்தின் மிகச்சிறப்பாக நடித்திருப்பதாகவும், குறிப்பாக நீதிமன்ற காட்சிகள் கண்களை குளமாக்கும் என்றும், அஜித்தின் வாதங்கள் ஒரு டன் செங்கற்கள் நம் மீது விழுவது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு அஜீத்துக்கு தனது ராயல் சல்யூட் என்றும் தெரிவித்துள்ளார். அவர் நேர்காண்ட பார்வை படத்துக்கு [4.5/5] ரேட்டிங் கொடுத்துள்ளார்.

Leave a Comment