புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஹாலிவுட் படங்களில் நடித்த நெப்போலியன்.. தலைவரு வேற ரகம்

நடிகர் நெப்போலியன் பாரதிராஜாவின் படங்களில்தான் முதலில் அறிமுகமானார். இவருக்கு நெப்போலியன் என்ற பெயரை வைத்ததும் பாரதி ராஜ தான். சினிமா, அரசியல் என தன்னை சிறப்பாக மிகவும் பிசியாக வைத்திருந்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார்.

அங்கு சென்று பிசினஸில் ஒரு கலக்கு கலக்கி விட்டார். தன்னுடைய மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவில் செட்டில் ஆகும் முடிவை அவர் எடுத்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஜப்பானில் வைத்து கோலாகலமாக தனது மகன் திருமணத்தை நடத்தினார்.

ஹாலிவுட் படங்களில் நெப்போலியன்

முதல் படத்திற்காக 1000 ரூபாய் சம்பளமாக வாங்கிய அவர், தற்போது கோடிக்கணக்கில் தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது நெப்போலியன் பகிர்ந்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் பாரதி ராஜ நெப்போலியன் என்று பெயர் வைத்தபோது இவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாம். நெப்போலியன் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெயராக இருந்தபோதிலும், அனைவரும் மதுவின் பிராண்ட் என தன்னை கேலி பேசியுள்ளார்களாம். ஆனால் அதை எதையும் இவர் பொருட்படுத்தவில்லை.

தான் ஹாலிவுட்டிலும் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பாரதிராஜா இந்த பெயரை தனக்கு வைத்துள்ளதாக பேசியுள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக பேசிய அந்த வார்த்தைகள் தற்போது பலித்துள்ளதாகவும் நெப்போலியன் பேசியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தான் 4 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளதாகவும் ஆனால் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் நெப்போலியன் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News