fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அரசியலைத் தாண்டி நடிப்பில் மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்.. எதிர்பார்ப்பை கிளப்பிய நெஞ்சுக்கு நீதி டீசர்

udhayanidhi-stalin-nenjukku-neethi

Videos | வீடியோக்கள்

அரசியலைத் தாண்டி நடிப்பில் மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்.. எதிர்பார்ப்பை கிளப்பிய நெஞ்சுக்கு நீதி டீசர்

ஹிந்தியில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்த ஆர்டிகிள் 15 திரைப்படம் தற்போது தமிழில் நெஞ்சுக்கு நீதி என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன், திரில்லர் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரின் ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கிறது.

தூக்கில் தொங்கும் இரண்டு சிறுமிகளின் தற்கொலையில் ஆரம்பிக்கும் இந்த ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக இருக்கிறது. அரசியலைத் தாண்டி நேர்மையான போலீஸ் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அனல் தெறிக்கிறது.

அதிலும் டீசரில் இடம்பெற்றுள்ள சிறுமிகளின் அலறல் சத்தமும், பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் தியேட்டரில் நிச்சயம் ரசிகர்கள் கைதட்டலை பெறும்.

ஒருவன் வலியில் கத்துனா கூட ஏன் கத்துற என்று கேட்பார்களே தவிர அடிக்கிறவன ஏன் அடிக்கிற என்று கேட்க நாதியில்லை, அவன் நல்லவனா இருக்கறதும், கெட்டவனாக இருக்கறதும் ஜாதியில் இல்ல அவனுக்குள்ள இருக்கிற குணத்தில் தான், நியாயத்தின் பக்கம் நிற்கிறது தான் நியூட்ரல் என்பது போன்ற வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கிறது.

அதிலும் ஆரியின் கதாபாத்திரம் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அவருடைய கேரக்டர் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. நிஜ வாழ்வில் பல சமூக விஷயங்களையும் புரட்சியையும் பேசிவரும் ஆரி இந்தப் படத்திலும் ஒரு புரட்சியாளனாக தெரிகிறார். ஆக மொத்தம் இந்த நெஞ்சுக்கு நீதி டீசர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

Continue Reading
To Top