நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த வசூல்.. பல கோடியில் புரளும் உதயநிதி

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஜாதி, மதம், இனம், பாலினம் என எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயராகவன் ஆக உதயநிதி நடித்திருந்தார். இப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் ஆர்ட்டிகள் 15 ஹிந்தி படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்காக சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன், இளவரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படம் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என உதயநிதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இளவரசு நெஞ்சுக்கு நீதி படத்தின் வசூலை பற்றி வெளியிட்டார். அதாவது இப்படம் 12 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளதாம். மேலும் 6 கோடி ஷேராக பெற்றுத்தந்து படத்தை வெற்றி அடையச் செய்துள்ளது என இளவரசு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்தியாளர்கள் உதயநிதியிடம் மாமன்னன் படத்திற்கு பிறகு நீங்கள் படங்களில் நடிக்க மாட்டீர்கள் என்ற செய்திகள் இணையத்தில் வெளியாகிறது என கேட்டனர். கண்டிப்பாக நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தால் நடிப்பேன் என உதயநிதி பதிலளித்தார்.

தற்போது உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே படம் உருவாகியுள்ளது. மேலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.