Connect with us
Cinemapettai

Cinemapettai

sj-suriya-cinemapettai

Videos | வீடியோக்கள்

பக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ சூர்யா.. வைரலாகும் நெஞ்சம் மறப்பதில்லை Sneak Peek வீடியோ

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை என்னதான் மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும், அவர்களை விட ஒரு படி மேல்தான் செல்வராகவன் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக செல்வராகவனுக்கு சிறப்பாக எதுவுமே அமையவில்லை.

ஏன் இத்தனைக்கும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் கூட்டணி போட்டு வெளியான என் ஜி கே படம் கூட படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் செல்வராகவன்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக போவதாக ரிலீஸ் டீசர் வெளியிட்டது படக்குழு.

அதனைத் தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த காட்சியை பார்க்கும் போதே எஸ் ஜே சூர்யா சைக்கோவாக நடித்திருப்பது தெரியவருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாகியுள்ளது.

Continue Reading
To Top