கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்டிலும் படம் செப்டம்பர் இரண்டாம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.