இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன்.

இப்படம் ரெடியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது. முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.

இந்நிலையில் கடைசியாக இப்படத்தை அடுத்த மாதம் ஜூன் 2 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான பேப்பர் விளம்பரத்தையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.