Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

எஸ் ஜே சூர்யாவின் மிரட்டல் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

ஒரு காலகட்டத்தில் காமெடி பேய் படங்களுக்கு டிமாண்ட் உள்ள நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட்.  அசத்தலாக திரைக்கதை அமைத்து நடிகர், நடிகையர் மற்றும் டெக்கினிக்கல் குழுவை முழுவதுமாக நம்பி செல்வா இறங்கிய ப்ரொஜெக்ட்.

பல தடைகளை சந்தித்தும், OTT ரிலீஸ் செல்லாமல் செல்வாவின் ரசிகர்களை நம்பி திரையரங்க ரிலீஸ் சென்றுள்ளனர் இந்த டீம். ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

கதை – வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், பிராட் வேலைகளையும் பார்த்து இன்று கம்பனி முதலியாக சூர்யா. தனது பழைய கூட்டாளிகளையே வேலைக்கு வைத்துவிட்டு கிடைத்த வாழக்கையை அனுபவித்து வருகிறார் நம் ஹீரோ. மனைவி நந்திதாவிடம் இருந்து பணம் தான் கிடைக்கிறது, இல்லறசுகம் கிடைக்காமல் அல்லாடுகிறார்.

தன் மகனை கவனிக்க வரும் ரெஜினாவிடம் தன்னை இழக்கிறார். என்ன செய்தும் அவளை வழிக்கு கொண்டுவர முடியவில்லை, திட்டம் போட்டு தன் ஆசையை பூர்த்தி செய்கிறார். எனினும் அவளை கொன்று விட  இவர் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதே இரண்டாம் பாதி.

சினிமாபேட்டை அலசல் – முதல் பாதி முழுக்க ராம்சே ஜிம் கேரி ஸ்டைலில் நம்மை கவர்ந்து விடுகிறார். ஹீரோயின் இருவரது நடிப்பிலும் செல்வாவின் முத்திரை தெரிகின்றது. சூர்யா தான் இரட்டை வேடம் போடுபவர் என நாம் நினைக்க, நந்திதாவின் கதாபாத்திரம் பற்றிய புரிதல் வரும் சமயத்தில், எழுத்தாளர் செல்வா க்ளாப்ஸ் வாங்குகிறார்.

nenjam marapathillai

தான் உயரத்துக்கு சென்றாலும், தன் கை தடிகளை பக்கத்தில் வைத்துகொண்டு நினைத்தை சாதிக்க நினைக்கும் சூர்யாவின் கதாபாத்திரம் செம்ம பிளஸ். எதிரி பேயாக இருக்கும் சமயத்தில் கூட அசராத இவரது பிளானிங் செம்ம தான்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – கடவுள் vs சாத்தன் என பாண்டஸி கலந்து சொல்ல வருகிறாரா செல்வா என்றே நமக்கு தோன்றுகிறது. எனினும் எதுவும் தெளிவாக சொல்லப்படவில்லை. ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் வரிசையில் இப்படமும் சேர்கிறது. இறுதியில் ரொம்ப சுமாரான க்ராபிக்ஸ் ரொம்பவே உறுத்தல்.

எஸ் ஜே சூர்யா, யுவன், ரெஜினா இந்த மூவரும் தான் பிளஸ்.  நெஞ்சம் மறப் “பதில்” லை படத்தில் என்ன பதில் உள்ளது என்பது அவரவரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி தான் கிடைக்கும்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25/5

Continue Reading
To Top