Nelson Dilipkumar: ரஜினியின் கேரியரில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக முன்பே நெல்சன் அறிவித்திருந்தார். இப்போது ரஜினி செம பிசியாக இருக்கிறார்.
வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் அக்டோபர் 10 திரைக்கு வர இருக்கிறது. இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தில் தேவா என்ற கேரக்டரில் ரஜினி நடிக்கிறார்.
இந்நிலையில் மிக விரைவில் ஜெயிலர் 2 படபிடிப்பு தொடங்க இருக்கிறது. அதாவது அக்டோபர் முதல் வாரத்திலேயே படப்பிடிப்பை நடத்த நெல்சன் முடிவு செய்துள்ளாராம். அதற்கான வேலையும் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் 2 படத்தை ஆரம்பிக்கும் நெல்சன்
ஆனால் ஜெயிலர் போல் ஜெயிலர் 2வுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற சந்தேகம் இப்போது எழுந்து இருக்கிறது. அதாவது ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் போன்ற நடிகர்கள் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.
இரண்டாம் பாகத்தில் அவர்களது கேரக்டர் கதை முழுவதும் பயணிக்க இருக்கிறதாம். மேலும் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் மலையாள நடிகர் மோகன்லால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த விஷயங்களை கூறி வருகின்றனர்.
ஜெயிலர் படம் வெளியான போது மோகன் லாலுக்கு இருந்த ஒரு செல்வாக்கு இப்போது குறைவுதான். ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடிக்கும் நிலையில் எந்த அளவுக்கு படத்திற்கான வரவேற்பு கிடைக்கும் என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.
ஜெயிலர் 2க்கு தயாராகும் ரஜினி
- ரஜினிக்கு வில்லன் எல்லாம் ஓல்டு ஸ்டைல்
- ரஜினி ரிஜெக்ட் பண்ணியவர்க்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் வாழ்வு
- டாப் ஸ்டார் படத்தில் கேமியோவாக ரஜினி நடிப்பாரா.?