புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

இக்கட்டான சூழ்நிலையில் நெல்சன்.. மத்தளம் போல் 2 பக்கமும் அடி வாங்கணும் போல

ரஜினிகாந்த் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை அதனால் தற்போது கண்டிப்பாக ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரஜினியை வைத்து 169 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. நெல்சன் உடன் ரஜினி இணைந்துள்ளதால் கண்டிப்பாக இந்த படம் காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காது என பலரும் கூறி வருகின்றனர். கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ரஜினியுடன் நெல்சன் கூட்டணி அமைத்துள்ளதால் நண்பராக பழகிய சக நடிகர்கள் பலருக்கு தங்களுக்கு வாய்ப்பு தரும்படி தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். அதாவது நெல்சன் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி இயக்கும் வாய்ப்பை பெற்ற போது அப்போது சிம்பு சினிமாவின் உச்சத்தில் இருந்தார். ஆனால் நெல்சன்காக அந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அப்போதிலிருந்து இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

சிம்பு, ரஜினியின் ரசிகர் என்பதால் நெல்சன்னிடம் ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதேபோல் சிவகார்த்திகேயனும் நெல்சன்னுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் விஜய் வைத்து இயக்கும் பீஸ்ட் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார். அதனால் சிவகார்த்திகேயனும் தனக்கு இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

டாக்டர் படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிக்கும்போது நெல்சன் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அப்படத்தில் வாய்ப்பு தருவேன் என கூறியுள்ளார். இதேபோல்தான் நெல்சன் இயக்கிய இரண்டு படங்களிலுமே யோகிபாபு நடித்திருப்பார். அதனால் இப்படத்திலும் யோகி பாபு நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது நெல்சன் யாருக்கு எந்த கதாபாத்திரம் கொடுக்கிறது யாரை நடிக்க வைப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளார்.

இதில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் அனைவரும் நெல்சன்னிடம் கோபித்துக் கொள்வார்கள். வெளியுலகிற்கு வேண்டுமென்றால் அதெல்லாம் ஒன்றும் கிடையாது என கூறுவார்கள். ஆனால் உள்ளுக்குள் ஏதாவது ஒரு மன வருத்தம் வரும் அதனால் நெல்சன் இவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார் எனக் கூறி வருகின்றனர்.

ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்திலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதனால்  இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி கடைசியில் வெற்றி கிடைக்காமல் தடுமாறியது. கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர்களை தேர்ந்தெடுக்காமல் பல நட்சத்திரங்கள் தேர்வு செய்தது தான் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. தற்போது இவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அடுத்த அண்ணாத்த படம் போல் இருக்கும் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News