வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மாத்தவேண்டியது ஹீரோ இல்ல.. டைரக்டர்.. அய்யோ! போச்சே! நெல்சன் எடுத்த அதிரடி முடிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் நான்கு திரைப்படங்கள் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. மேலும் 200 கோடி-க்கு மேல் வசூல் செய்து அதிரடி காட்டி வருகிறது.

4 நாட்களில் இந்த திரைப்படம் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. படமே 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த காரணத்தால் இது ஒரு லாபகரமான படம் தான் என்று கூறி வந்தார்கள். மேலும் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குனரான சிவபாலன் அறிமுகமான திரைப்படம் பிளடி பெக்கர்.

ஆனால் நெல்சனை நம்பி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 1ரூபாய் கூட லாபமில்லை. இதனால், உங்களை நம்பி தானே வாங்கினோம், என்று புலத்து ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த தயாரிப்பாளர் நெல்சன், தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

நெல்சன் எடுத்த முடிவு

விநியோகஸ்தர்களை கை விட கூடாது என்று எண்ணிய நெல்சன் ரஜினி ரூட்டை follow செய்துள்ளார். பொதுவாக ரஜினி, தன் நடிப்பில் வெளியான ஒரு படம் நஷ்டமானால், அதற்கான நஷ்ட ஈடை கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்துக்கே, பெரும் இழப்பு என்றால், மீண்டும் ஒரு படம் நடித்து கொடுப்பார்.

தற்போது நெல்சனும் அதையே செய்திருக்கிறார். ப்ளடி பெக்கர் படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியுள்ளார். படம் தியேட்டரில் தான் நஷ்டமே தவிர, OTT, மற்றும் satellite மூலமாக லாபம் தான் கிடைத்துள்ளது.

ஆனால் வந்த லாபத்தையும் விநியோகஸ்தர்களுக்கு கொடுத்துவிட்டார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “அண்ணே நீங்க மாத்தவேண்டியது ஹீரோவை இல்ல.. டைரக்டர் அ ” என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News