பக்காவா பிளான் பண்ணி இருக்கும் நெல்சன், பச்சை கொடி காட்டிய ரஜினி.. ஜெயிலர் 2 அப்டேட்

nelson-rajini-jailer
nelson-rajini-jailer

Jailer 2: கூலி படத்தை தாண்டி ஜெயிலர் 2 படத்திற்கு தற்போது அதிக அளவில் எதிர்பார்ப்பு எதிரி விட்டது இதற்கு காரணம் முதல் பாகத்தில் வெற்றி தான்.

ஜெயிலர் கொடுத்த எதிர்பாராத வெற்றி தான் அதன் இரண்டாம் பாகம் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது.

முதல் பாகத்தில் சின்ன சின்ன காட்சிகளில் வந்த மல்டி ஸ்டார்களை இரண்டாவது பாகத்தில் படம் முழுக்க காட்ட இருக்கிறார்கள்.

ஜெயிலர் 2 அப்டேட்

இந்த படத்திற்காக இயக்குனர் நெல்சன் எல்லா பிளானும் போட்டு வைத்திருக்கிறார். நெல்சன் என்ன சொன்னாலும், எவ்வளவு பட்ஜெட் எடுத்துக் கொண்டாலும் ஓகே பண்ண சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது.

கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

15 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கும் ரஜினிக்கு ஐந்து நாட்கள் சென்னையில், 10 நாட்கள் ஹைதராபாத்திலும் ஷூட்டிங் இருக்கிறது.

அதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு ரஜினி ஓய்வு எடுக்கிறார். இந்த காலகட்டத்தில் படத்தின் இதர வேலைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதம் ரஜினிகாந்த். படப்பிடிப்புக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner