fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது இன்று விஜய்யை இயக்கும் நெல்சன் 2007ல் தளபதி போஸ்டருடன் க்ளிக்கிய போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது இன்று விஜய்யை இயக்கும் நெல்சன் 2007ல் தளபதி போஸ்டருடன் க்ளிக்கிய போட்டோ

தளபதி 65 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், கிரா அத்வானியுடன் ஜோடி சேர்கிறாராம் விஜய். தமிழ், தெலுங்கு மட்டுமன்றி ஹிந்தியிலும் இப்படம் வெளியாகும் என்கின்றனர்.

விஜய் தன் படங்களை தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களின் ஸ்டைலில் ஒரு மாற்றம் வந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில். இளம் இயக்குனர்கள் கொடுக்கும் பிரெஷ் பீல் மற்றும் உத்வேகம் இவருக்கு பிடித்து விட்டதாம். அட்லீ ஆரம்பித்து அடுத்து லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தார் விஜய். இந்நிலையில் டாக்டர் வெளியாவதற்கு முன்பே ஸ்க்ரிப்ட் மீது நம்பிக்கை வைத்து நெல்சனுடன் இணைந்துள்ளார்.

நெல்சன் விஜய் டிவியின் தத்து பிள்ளை என்று கூட சொல்லலாம். தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவர். அழகி, பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் வரை இயக்கியவர். முன்பே 2010 இல் சிம்புவின் வேட்டை மன்னன் வாயிலாக இயக்குனர் ஆக வேண்டியது, எனினும் 2018 இல் கோலமாவு கோகிலா இவரை கோலிவுட்டில் இயக்குனர் ஆகியது.

இந்நிலையில் ட்விட்டரில் 2007 இல் விஜயின் அழகிய தமிழ் மகன் போஸ்டர் முன்பு நின்று நெல்சன் க்ளிக் செய்த போட்டோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அட ஆமாங்க நாம் கோலிவுட்டில் fan boy moment!

nelson director

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top