Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-dilip-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜை ஓரங்கட்ட வரும் நெல்சன் திலிப் குமார்.. சபாஷ் சரியான போட்டி!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தற்போது இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம்,கைதி படங்களுக்குப் பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை கொடுத்துள்ளார்.

விஜய்யுடன் கூட்டணி அமைத்த பிறகு லோகேஷ் கனகராஜ் மார்க்கெட் நிலவரம் எந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேகத்தில் படுபயங்கரமாக வைரல் ஆகி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த நெல்சன் திலிப்குமர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படமும் சூப்பராக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி இம்பிரஸ் செய்துவிட்டாராம்.

அனேகமாக தளபதி65 படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என உறுதியான தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் விஜய் தரப்பில் இருந்தோ, நெல்சன் தரப்பில் இருந்தோ எந்தவித செய்திகளும் அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை.

thalapathy-65-cinemapettai

thalapathy-65-cinemapettai

நெல்சன் தளபதி65 படத்தை இயக்கும் நிலையில் அவரது மார்க்கெட் லோகேஷ் கனகராஜ் அளவிற்கு விரைவில் உயரும் என கோலிவுட் வட்டாரங்களில் இப்போதே பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Continue Reading
To Top