போயஸ் கார்டனே கெதி என்று கிடக்கும் நெல்சன்.. ஒரே நேரத்தில் இரண்டு படமா!

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார். தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே , யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் மயிலாப்பூரில் இருக்கும் என் ஏ கே ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்சன் மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

அங்கு இருந்தபடியே அவர் பீஸ்ட் படத்தின் வேலைகளை கவனித்து வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதால் பட வேலைகளை விரைவாக முடிக்க அவர் இங்கு தங்கியுள்ளார். மேலும் இதற்கு ஒரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது.

சில மாதங்களாக நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியானது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் நெல்சன் போயஸ் கார்டனுக்கு அருகில் வீடு பார்த்து உள்ளார்.

அதாவது மயிலாப்பூர் போயஸ் கார்டனுக்கு அருகில் இருப்பதால் அங்கு இருந்தபடியே ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான வேலையும் அவர் சத்தமில்லாமல் செய்து வருகிறார். கதை சம்பந்தமான விஷயங்கள் பேசுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் இது அவருக்கு வசதியாக இருக்கிறதாம். இதனால் விரைவில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.