இப்படி இருக்கும் போதே 5 படம் நடித்துவிட வேண்டும்.. இளம் இயக்குனருடன் கூட்டணி வைக்கும் ரஜினி

கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்த படங்களை தொடர்ந்து இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சில காலம் உடல் நலம் சரியில்லாமல் இருந்த ரஜினிகாந்த் தற்போது பூரண நலத்துடன் இருக்கிறார். இதனால் அவர் குறைந்தது 5 படங்களாவது நடித்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

வெகு நாட்களுக்குப் பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் துறுதுறுப்பான நடிப்பையும், நடனத்தையும் பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகி வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டாரும் அந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் இளமையாக பீல் பண்ணுகிறாராம்.

இதனால் சூப்பர்ஸ்டார் தன்னுடைய பழைய துள்ளலான நடிப்பை அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்த இருக்கிறார். தற்போது நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் இணையும் படத்தை அண்ணாத்த திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் தயாரிக்க இருக்கிறது.

கிட்டத்தட்ட உறுதியான இந்தக் கூட்டணி விரைவில் படத்தை பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இதனால் சூப்பர் ஸ்டாரை வேற லெவலில் காண ரசிகர்கள் இப்போதே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்