Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிளக்ஸ், கட்அவுட் வைக்காமல் நெல்லை விஜய் ரசிகர்கள் செய்த அசத்தல் செயல்.. குவியுது பாராட்டு
Published on
சுபஸ்ரீ அவர்களின் மரணத்துக்கு பின் சினிமா துறையில் பெரிய மாறுதல்கள் நாம் காண முடிகின்றது. கப்பன் சமயத்தில் சூர்யா ரசிகர்கள், அசுரன் தனுஷின் ரசிகர்கள் என பிளக்ஸ் அடிப்பதை தவிர்த்தனர். இந்த லிஸ்டில் தற்பொழுது தளபதி விஜய்யின் நெல்லை மாவட்ட ரசிகர்களும் இணைந்துள்ளனர். மேலும் இவர்கள் ஒரு படி மேலே போய் அந்த காசில் மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை அமைத்து கொடுத்துள்ளனர்.

FB 1

FB
காவல் துணை ஆணையர் ச. சரவணன் அவர்களை அணுகி சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி கேட்க, அவர் கொடுத்த ஐடியா தான் இதுவாம்.
