நெல்லையில் 13 பேரை காவு வாங்கிய கொரோனா.. காரணம் கேட்டு உச்சகட்ட பதட்டத்தில் தமிழகம்!

தமிழ் நாட்டில் சமீப காலமா கொரோனா 2-ம் அலை படு தீவிரமாக பரவி பல மக்களும் பாதித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பொதுமக்கள் அலைந்து அல்லாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர்.

டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் பல உயிர்கள் பறிபோயின. தற்போது தமிழ்நாடு அரசு கொரோனாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தடுப்பூசி வழங்கி வருகிறது.

corona hospital
corona hospital

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கல்லூரியில் ஆக்சிஜன் இருப்பு தீர்ந்து விட்டதால், அதனை சரி செய்வதற்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 13 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த மருத்துவமனைக்காக ஐஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இருந்து சிறிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு வருகின்றனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வருவதால் படுக்கையறை இல்லாமல் பல நோயாளிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதனை சரி செய்வதற்கு ஒரே வழிதான் கிராமத்திலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்து குறைந்த அளவிலான படுக்கை அமைத்து அங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வந்தால் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு பெருவாரியான மக்கள் செல்லமாட்டார்கள். இதனால் படுக்கை அறை தட்டுப்பாடும் இருக்காது என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்