Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நெஞ்சம் மறப்பதில்லை ஹிட் அடிக்க இரண்டு முக்கிய காரணம் என்னவென்று பகிர்ந்த எஸ் ஜே சூர்யா

ஒரு சில படங்கள் தான் ஆரம்பிக்கும் சமயத்திலேயே அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி மூன்று இயக்குனர்களின் சங்கமத்தில் கவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா நடிப்பில் காமெடி பேய் படங்களுக்கு டிமாண்ட் உள்ள நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட் தான் நெஞ்சம் மறப்பதில்லை.

இப்படம் சந்தித்த பிரச்சனைகள் ஏராளமோ ஏராளம் தான். 2016 இல் இருந்து ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பல தடைகளை சந்தித்தும், OTT ரிலீஸ் செல்லாமல் செல்வாவின் ரசிகர்களை நம்பி திரையரங்க ரிலீஸ் செய்து வெற்றியை பெற்றுள்ளது இந்த படக்குழு.

படத்தினை பற்றி பிரபல யூ ட்யூப் சேனலுக்கு சூர்யா பேட்டி கொடுத்தார். அதில் படம் ஹிட் ஆக இந்த இரண்டும் தான் முக்கிய காரணம் என சொல்லியுள்ளார்.

nenjam-marapathillai-cinemapettai

nenjam-marapathillai-cinemapettai

முதலில் செல்வாவின் படம் இவ்வளவு வருடங்கள் தள்ளி ரிலீஸ் ஆனதால் தான் அனைவருக்கும் படம் பிடித்துவிட்டது. (பொதுவாகவே ரிலீஸ் சமயத்தை விட, சில ஆண்டுகள் கழித்து தான் செல்வாவின் படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் என கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு.)

இரண்டாவது லாக் டவுன் சமயத்தில் வெப் சீரிஸ் பல பார்த்து வேறு விதமான புதிய முயற்சியை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர் என சொல்லியுள்ளார்.

Continue Reading
To Top