fbpx
Connect with us

எடை பார்க்கும் இயந்திரத்தில் பிரதமர் நேரு கூறியும் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?

kamarajar

News | செய்திகள்

எடை பார்க்கும் இயந்திரத்தில் பிரதமர் நேரு கூறியும் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம், அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்வரான காமராஜரும் சென்றுள்ளார். தற்பொழுது பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்று ஒரு ரூபாய் காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்… காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றுள்ளார். நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு, திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று.

அப்பொழுது நேரு, காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும், இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் ஒரு ரூபாய் காசு கூட இபொழுது அவரிடம் இருக்காது என்று கூறியதோடு, காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தாராம். கையில், பணம் வைத்திருந்தால், தேவையற்ற செலவு செய்து விடுவோம் என்று.. பணமே இல்லாமல் சென்றுள்ளார் படிக்காத மேதை காமராஜர்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top